Monday, 30 January 2012

முசுகுந்த நாடு

முசுகுந்த சமுதாயம்

முசுகுந்த நாடு:

தற்சமயம் திருவாரூர் என அழைக்கப்படும் ஆரூரை ஆண்டு வந்த முசுகுந்த சோழ சக்ரவர்த்தியால் அமைக்கப் பெற்றதே முசுகுந்த நாடு. பசுமை வளம் வாய்ந்த 32 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. முசிறியை தலைமை இடமாகக் கொண்டுள்ளது.
முசுகுந்த நாடு என அழைக்கப் பெறுவதற்கு வரலாற்று கூற்று உண்டு. முசுகுந்த நாட்டை உருவாக்கிய முசுகுந்த சோழ சக்ரவர்த்தி, ஒரு சிறந்த சிவன் பக்தர். திருவாரூர் அருள்மிகு தியாகராஜ திருக்கோவில் முசுகுந்த சோழனால் உருவாக்கப்பட்டது. இவர் தீராத சரும நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்க்காக பல சிவனாலயங்கள் சென்று வழிப்பட்டு வந்தார். இருந்தும் அவர் நோய் தீரவில்லை. ஒரு நாள் அமைச்சர் மற்றும் நண்பர்களுடன் முசிறி வழியாக உலா சென்றுகொண்டு இருந்தார். அனைவரும் ஓய்வுக்காக முசிறி குளக்கரையில்(அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் குளம்) சிறிது நேரம் அமர்ந்தனர். அச்சமயம் அரசரின் நாய் குளத்தில் நீந்தி விளையாடி கொண்டிருந்தது. அவரது நாய்க்கும் சரும வியாதி இருந்து வந்தது.
மறுநாள் அரசனது நாய்க்கு நோய் குணமடைந்ததைக் கண்டு வியந்தனர். உடன் அரசரும் அக்குளத்தில் குளித்து, சிவனை வணங்கினார். பல வகை வைத்தியத்திற்கு குணமாகாத அவரது சரும நோய், சிவனின் திருவருளால் குணமடைந்ததைக் கண்டு வியந்தார். உடன் அவ்விடத்தில் சிவனுக்கு ஒரு கோவில் அமைத்தார். இதுவே தற்ச்சமயம் உள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்.
பின்னர் கோவிலின் வளர்ச்சிக்காகவும், பராமரிப்பிற்க்காகவும் கோவிலைச் சுற்றி 32 கிராமங்கள் அமைத்து, அதற்க்கு தேவையான நிலங்களையும் வழங்கினார். அவரது நாட்டு மக்களையும் இங்கு அழைத்து நிரந்திரமாகத் தங்கச் செய்தார். இப்படி உருவாக்கப் பெற்றதே பின்னர் முசுகுந்த நாடு என்று மக்களால் அழைக்கப்பெற்றது.

முசுகுந்த நாடு உள்ளடக்கிய 32 (தற்சமயம் எண்ணிக்கை 35 ஆக உள்ளது) கிராமங்கள்:
1. அண்டமி11. கீழக்குறிச்சி21. திட்டக்குடி31. மன்னாங்காடு
2. ஆத்திக்கோட்டை12. சிலம்பவேளாங்காடு22. நாட்டுச்சாலை32. மூத்தாக்குறிச்சி
3. ஆலடிக்குமுளை13. சுந்தம்பட்டி23. நெம்மேலி33. வாட்டாகுடி
4. ஆலத்தூர்14. சூரங்காடு24. பட்டிக்காடு34. விக்ரமம்
5. ஆலம்பள்ளம்15. சூரப்பள்ளம்25. பழைய மதுக்கூர்35. வெண்டாக்கோட்டை
6. ஏனாதி16. செங்கபடுத்தான்காடு26. பள்ளத்தூர்
7. கட்டயங்காடு17. செண்டாங்காடு27. பாளமுத்தி
8. கருப்பூர்18. செம்பாளூர்28. புதுக்கோட்டை உள்ளூர்
9. காசாங்காடு19. செவந்தன்பட்டி29. புலவஞ்சி
10. கீரத்தூர்20. தாமரங்கோட்டை30. மட்டாங்கால்

முசுகுந்த சமுதாயம்:

முசிறி 32 (தற்சமயம் எண்ணிக்கை 35 ஆக உள்ளது) கிராமங்களில், அதிகபடியான மக்கள் வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கு விவசாயம் தான் முக்கியத் தொழில். 'வேளாண்மை' என்ற பெயரிலிருந்து வந்ததே 'வேளாளர்'. வேளாண்மை செய்வதில் தனித் திறமை வாய்ந்தவர்கள். மழை(வெள்ளம்) நீரை னைகள் அமைத்து தடுத்தும், குளங்கள், ஏரிகள் மூலம் சேமித்தும் வேளாண்மை செய்து வந்தனர். இதனால் 'கார்காத்த' வேளாளர் எனவும் அழைக்கப் பெற்றனர். இவர்கள் பிற்காலத்தில் 'பிள்ளை' என்று அழைக்கப் பெற்றனர். இன்று வீரகோடி வேளாளர், சோழி வேளாளர், கொங்கு வேளாளர், பாண்டிய வேளாளர், நாஞ்சில் வேளாளர், நன்குடி வேளாளர், முதலியார், சைவ பிள்ளைமார், கௌண்டர் என்ற பிரிவுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் தங்கள் குளத்திற்குள் பெண் எடுத்து, பெண் கொடுத்து திருமணங்கள் செய்து கொள்வர். பெரும்பாலும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்வர்.
இவர்கள் தவிர கள்ளர், வண்ணார், பிராமணர்கள், செட்டியார், கொயவர், அம்பலக்காரர், ஆதிதிரவிடர் போன்ற சமுதாய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அனைவரும் ஒரே கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர். பலதரப்பட்ட சமுதாய மக்கள் வாழ்ந்து வந்தாலும், அனைவரும் உறவினர்கள் நண்பர்களாய் ஒற்றுமையுடன் எந்தவித பாகுபாடின்றி ஒருதரப்பட்ட மக்களாய் வாழ்ந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment